My Favourite Lyrics-5
காற்றின் மொழி ஒலியா இசையா?
பூவின் மொழி நிறமா மணமா?
கடலின் மொழி அலையா நுரையா?
காதல் மொழி விழியா இதழா?
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை!
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்று வீசும் போது திசைகள் கிடையாது!
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது!
பேசும் வார்த்தைபோல மௌனம் புரியாது!
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது!
உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது!
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது!
வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்!
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்!
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்!
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்!
ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்!
ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்!
No comments.Vintage Vairamuthu!
one of my all-time favourite songs!! moving lyrics.. i simply loved coming across them again in ur blog.
ReplyDelete