இதயம் சொல்லும் சலாம்!
A Tamil translation of my recent post on A.R.Rahman done by my beloved younger brother Pu.Ko.Saravanan, a blogger cum author cum motivational speaker. His blog saravananagathan.wordpress.com is a must read for all history aficionados.
Here goes his beautifully written translation :
என் அண்ணன் குடிமைப்பணி தேர்வு முடிவுகளின் PDF கோப்பை UPSC தளத்தில் துழாவிக்கொண்டு இருந்த பொழுது நான் “அல் மதத் மௌலா” பாடலில் மூழ்கியிருந்தேன். இது எப்பொழுதும் இப்படித்தான். என்னுடைய பெயர் அகில இந்திய அளவில் 77வது இடத்தில் இருப்பது புலப்பட்ட பொழுது நான் சந்தோசக்கண்ணீர் துளிகளைச் சிந்தியிருக்க வேண்டும். ஆனால், என் வாழ்க்கையில் இதைவிடப் பெரிதாகச் சப்தமிடவும், கண்ணீர் உகுக்கவும் உருக்கமான தருணங்களில் நான் வாழ்ந்திருக்கிறேன். இதை விடக் கூடுதல் பரிசாக ஏ.ஆர்.ரஹ்மான் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று ஆஸ்கர் விருதுகளில் பிப்ரவரி,2009-ல் உலகுக்கு அறிவித்த பொழுது என் அன்னை என் அருகில் இருந்தார். அதையே என் வாழ்வின் மிக உன்னத தருணமாக கருதுகிறேன்.
நான், என் அண்ணன் மற்றும் எண்ணற்ற ரஹ்மானியாக்கள் (வெறியர்கள்) ரஹ்மானின் வெற்றியை எங்களின் வெற்றியாகக் கொண்டாடித் திரிந்து வளர்ந்தோம். ரஹ்மான் அழியாப்புகழுக்கு ஒரு வருடம் தள்ளி இருந்த பொழுது நான் பிறந்தேன். என் அம்மா நான் ஜிப்பரிஷில் பாடிய முதல் பாடலை அடிக்கடி நினைவு படுத்திக்கொண்டே இருப்பார். ‘ஆதல் ஊஜாவே எங்கே நீ எங்கே அந்நீர் அழியுதடி அண்ணே’ என்று மழலை மொழியில் கொன்ற அந்தப் பாடலில் என் வாழ்க்கை துவங்கியது. அப்பொழுதில் இருந்து ஏற்பட்ட பந்தம் எவ்வளவு அலாதியானது என்பதை ரஹ்மான் பாடல் வரிகளான ‘இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்,பிரிவென்னும் தீயில் விழாத சொந்தம்” சரியாக விளக்கக்கூடும்.
ஐந்து வயதில் "Spirit of Rangeela" பாடலுக்குப் பள்ளி ஆண்டுவிழாவில் ஆடவேண்டிய நான் என் வகுப்பின் அழகான (இப்பொழுது பெயர் மறந்துபோன) தோழியின் முன்னால் அவமானப்பட நேரிடும் என்று கடைசிக் கட்டத்தில் விலகிக்கொண்டேன். ஏழு வயதில் மாமா பையன் சத்ய நாராயணன் ARR ஆல்பங்களின் கேசட்டுகளை வாங்கி வந்த பொழுது நான் தொலைந்து போனேன். அவன் தன்னுடைய வாலட்டில் ARR படத்தை ஒட்டிவைத்து அடைகாத்தான். என்னுடைய ஆரம்பகால நினைவுத் தாழ்வாரத்தில் இடிமழையாய் இறங்கிய ‘மாறி மழை பெய்யாதே’ பாடலை கேட்ட பொழுதும், புது ஒலிகளும், ஷாகுல் ஹமீதின் குரலும் மண் வாசனையைப் போல ரம்மியமாக இன்னமும் புதிதாக இருக்கின்றன
இந்தக் காதல் 2005-06 ல் என் பக்கத்துவீட்டு ரஹ்மானியக் சதீஷுடன் இணைந்து எல்லாப் புதிய கேசட்டுகளையும் அவை வெளிவருகிற அன்றே வாங்கிக்குவித்த பொழுது உச்சத்தைத் தொட்டது ."Swades" கேட்டபடி பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வையும், பன்னிரெண்டாம் வகுப்புப் போர்களை ‘ஜாகே ஹைன்/ஒரே கானா” கேட்டபடியும் எதிர்கொண்டேன். கல்லூரிக்காலத்தில் என் ப்ளாக்கை ரஹ்மான் பற்றி எழுதப் பயன்படுத்திக்கொண்டேன். என்னுடைய பொதுத் தேர்தல் பற்றிய பதிவு கூட அழியாத மை தாங்கிய கரத்தோடு சிரிக்கும் ரஹ்மானின் படம் தாங்கியே பூத்தது. என் மனவெளியில் அழியா நாயகன் அல்லவா அவர்.
கல்லூரி வாழ்க்கை அற்புதமாகக் கடுப்பேற்றும் வகுப்புத் தோழர்களைத் தந்தது. ரஹ்மானின் இசையைக் கேலி செய்வதன் மூலம் என்னைச் சூடேற்ற முடியும் என்று அவர்கள் கண்டுகொண்டார்கள். ஒரு முறை ஜவகர்லால் நேரு ‘முதல்முறையாக அமெரிக்காவை ஒருவர் காணக்கூடாது’ என்று சொல்லியிருப்பார், இது ரஹ்மானின் இசைக்கும் பொருந்தும். முதல்முறை அதைக் கேட்கிற பொழுது உங்களை மொத்தமாக நிலையிழக்க வைக்கும். எங்கள் கல்லூரி வாழ்க்கையில் பலமுறை ரஹ்மானின் பாடலை ஆரம்பத்தில் கேட்டு ‘இது தேறாது’ என்று உதட்டை பிதுக்கிய பின்னர் அந்தப் பாடலை கேட்கிற பொழுது ரஹ்மானிடம் ‘மன்னிப்பாயா? மன்னிப்பாயா? ஒருநாள் வெறுத்தேன் மறுநாள் சிரித்தேன்’ என்று முணுமுணுக்க மட்டுமே முடியும்.
நான் குடிமைப் பணி தேர்வுகளுக்கு 2011-ல் தயாரான பொழுது அவரின் ஆகச்சிறந்த ஆல்பத்தைப் பரிசளித்தார். அதில் வரும் ‘தும் ஹோ’ இசைக்கோர்வை எல்லாக் காலத்தின் காதல் கீதப்பட்டியலிலும் இடம்பிடித்து விடும். இந்தத் தேர்வில் வெல்வது கடுமையான ஒன்றாக இருமுறை தோற்ற பொழுது எனக்குத் தோன்றியது. ஆனால், ரஹ்மான் எப்பொழுதும் என்னைச் சுற்றியே இருந்தார், சித்ராவை என் காதுகளில் "தொடு வானம் தொட போகும் போது தூரம் தூரம் போகும், இருந்தாலும் அதைத்தீண்டி பார்க்கும் காலம் வந்து சேரும்’ என்று பாட வைத்தார்.
தனித்த பேருந்து பயணங்களில் பெசன்ட் நகர் பீச்சுக்கு போன பொழுது எல்லாம் ‘நெஞ்சே எழு’ உடன்வரும். ரஹ்மானியக்குகளுடன் அவர் இசையில் நாதஸ்வர வாசிப்புகள் அடங்கிய பாடல்கள், இரண்டு பாடல்களைக் கலந்த பின்னணி இசை என்று அதீத அளவுகளில் விவாதங்கள் சென்றிருகின்றன . TCC எனப்படும் உத்வேகம் ததும்பும் நகைச்சுவை, சாதுரியம் மிகுந்த முகநூல் க்ரூப்பின் சகாக்களுடனான வார்த்தைப் போர்கள், கொண்டாட்டங்கள், தேர்வறைக்குள் நுழைவதற்கு முன்னால் மூடநம்பிக்கை ததும்ப ரஹ்மானின் ஆன்மீக/சூபி பாடல்களைக் கேட்டுவிட்டு உள்ளே நுழைவது (சில சமயத்தில் முழுப்பாடல் முடிந்த பின்பே தேர்வறைக்குள் நுழையும் அளவுக்கு இசைப்பைத்தியம் பீடித்து இருந்தது), தூக்கமில்லா நெடிய இரவுகளில் ‘ஏஹ் ஜோ தேஷ் ஹை; பாடலைக் கேட்டு லயித்து இருந்தது என்று இப்படிப்பட்ட தருணங்களை இந்த நான்கு வருட தேர்வுத் தயாரிப்புகளிலிருந்து அசைபோட்டுக்கொண்டே இருப்பேன்.
கடைசிச் சில மாதங்களில் நான் குடிமைப் பணி தேர்வு முடிவுகளுக்காகக் காத்துக்கொண்டு இருக்கும் பொழுதே தமிழக அரசு, பொதுத் துறை வங்கி ஆகியவற்றில் வேலை பெற்றேன். ரஹ்மான் பொறுமையோடு என்னை எச்சரித்தார், ‘உன்னைக் கடக்கும் சாலைகள் அனைத்தும் நீ செல்லும் பாதைகள் அல்ல, சமயங்களில் நின்று கொண்டிருப்பதே நீ எடுக்கும் சிறந்த அடி’ என்று ‘பம்பாய் ட்ரீம்ஸ்’ஸின் பாடலின் மூலம் அதைச் சொல்லிக்கொடுத்தார். ஆனால், முதல் முறையாக ரஹ்மானின் அறிவுரையை கேட்காமல் நான் மாநில அரசு பணியில் சேர்ந்தேன்.
குடிமைப் பணி தேர்வு முடிவுகள் வந்ததும், எனக்கு ‘Nadaan Parindey’ பாடலில் வரும், ‘கொய் பி லே ரஸ்தா, து ஹை து மெய்ன் பஸ்தா, அப்னே கி கர் ஆயேகா து’ (எந்தச் சாலை, பாதை நீ எடுத்தாலும், உன் இல்லம் இறுதியில் சேர்ந்திடுவாய்’ என்னும் வரிகள் காதில் ஒலித்தன. நான் இறுதியில் என் இல்லமான இந்திய குடிமைப் பணியில் சேர்ந்துவிட்டேன். படங்களின் ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ஏற்ப இசையை இசையமைப்பாளர்கள் உருவாக்குவார்கள். நானோ ரஹ்மானின் இசைக்கேற்ப என் வாழ்க்கையின் காட்சிகளை அமைத்துக்கொண்டேன். நான் என் வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கிறேன், எனக்குச் சவால்கள் காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் எப்பொழுதும் ஏ.ஆர்.ரஹ்மான் என்னுடன் எனக்காக ‘வானே என் மேல் சாய்ந்தாலுமே நான் மீண்டு காட்டுவேன், நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சினால் நிலவை வாங்குவேன்’ பாடிக் கொண்டிருப்பார்.நெஞ்சார்ந்த நன்றி குரு!
மொழிபெயர்ப்பு: தம்பி சரவணன்
P.K.SARAVANAN,B.E.(AIE),CEG,ANNA UNIVERSITY,CHENNAI-25
Beautifully translated..with a lovely title :)
ReplyDeleteI am living in the same world as you live in. But I am still struggling to pass in group 4 exam. Very proud of you mate to achieve your goal (achieved?/ anything beyond that) at very young age. Its astonished me, to think about your hard work.
ReplyDeleteWe learned a lot from your article, it is well written.
ReplyDeleteThank You.......
India Tours Services
No doubt this is an excellent post I got a lot of knowledge after reading good luck.!
ReplyDeleteluxury tour operators
I am sure the post is good. But not very readable for me.
ReplyDeletecheap celtic woman tickets
discount celtic woman tickets
Thanks for sharing the post. It's really nice.
ReplyDeletesecure airport parking Luton
Luton parking deals
The way you have presented the post with all the examples is also very impressive.
ReplyDeleteThanks for sharing!!
Amazing site!!.. i can't belive this. what an Wonderful photography.
the wedding photographers are doing a fabulous job. very stunning looking for that photo's.
Wedding venues in chennai
Well written....Nanpa....
ReplyDelete