#விகடன்90!





 முகநூலில் நிரம்பி வழியும் #விகடன்90 நினைவுகளைப் படிக்கும் பொழுது எனக்குள் இருக்கும் watch mechanic-உம் கால எந்திரத்தை முடுக்குகிறான். சாயங்காலம் வீட்டுக்கு திரும்பும் பொழுது அலுவலகத்தில் இருந்து பத்திரிகைகளைக் கொண்டு வரும் என் அம்மாவே எனது வாசிப்பு உலகத்தின் திறவுகோலாகத் திகழ்ந்தார். எனக்கு அறிமுகம் ஆன முதல் தமிழ் பத்திரிகை தேவயானி அட்டையை அலங்கரித்த ஒரு குமுதம் இதழ். அந்த ஒன்றும் அறியாத வயதில் (வயது - 8 ,வருடம்-1999) தேவயானியே உலக அழகி என்றும் அவளைக் கவரும் ராஜகுமாரன் நான் ஆக வேண்டும் என்று சில தூக்கமில்லா இரவுகளைக் கடந்தேன். (பின்பு நிஜமாகவே ஒரு ராஜகுமாரன் வந்தார்

2002-இல் இருந்து தான் புகைப்படங்களைத் தாண்டி வாசிக்கத் தொடங்கினேன். ஆனந்த விகடனில் முதலில் படித்தது அதன் கறாரான சினிமா விமர்சனங்கள் தான் . இப்போதெல்லாம் புன்னகையுடன் மதிப்பெண்களைத் தாரை வார்க்கும் விகடன் அந்தக் காலத்தில் ஏக கறார். ஷங்கர்-சுஜாதா படத்தையே "ச்சீ" என அறசீற்றத்துடன் தூக்கி எறியும் தன்மை என்னைக் கவர்ந்தது

அப்போது விகடன் மூலம் எனக்கு அறிமுகமானவர் சுஜாதா. சுஜாதா மூலமே எல்லாரும், எல்லாமும் அறிமுகமாயின. அவர் ஒவ்வொரு வாரமும் தான் கற்றதையும் பெற்றதையும் பகிரும் அந்தப் பக்கங்கள் ரொம்ப special . ஒரு வாரம் Bill Bryson என்பார். இன்னொரு வாரம் Dan Brown என்பார். சரி,அடுத்த வாரம் இன்னொரு புத்தகத்தை அறிமுகப்படுத்துவார் எனப் பார்த்தால் ஸ்ரீரங்க நினைவுகளை எடுத்து விடுவார்

ஜெயமோகன் , தனது நினைவஞ்சலியில் சுஜாதா இலக்கியவாதி அல்ல என்பது போல் எழுதி இருந்தார். ஆனால் என்னைப்போன்ற எளியவனுக்கு ஜெயமோகன் என்று ஒருவர் இருந்தது தெரிந்ததே "கற்றதும் பெற்றதும்" மூலமாகத் தான். "இந்தியாவின் எதிர்காலம் இளம் IAS அதிகாரிகளிடம் காண்கிறேன்" என அவர் எழுதிய வரி் ( துல்லியமாக இதைத்தான் எழுதினாரா எனச் சரியாகத் தெரியவில்லை) ஏற்படுத்திய பாதிப்பை நான் அறுவடை செய்யப் பத்தாண்டுகள் ஆனது


கல்லூரிக்கு எதிரே இருந்த கடையில் ஒவ்வொரு வெள்ளியும் விகடன் வாங்குவது lab இல் output வராமல் சம்பத் சாரிடம் வசை வாங்குவது போல வாழ்க்கை முறையாக ஆகி இருந்தது. IAS தேர்வுக்கு Andrew Heywood, Brian Nelson , Ashutosh Varshney எனக் கனமான பலரை படிக்கும் நேரத்தில் "தரமான மனவருடலாக"ஆக இருந்தது விகடன் தான். விகடன் மேடையில் சகாயம் அவர்களின் தூய்மை சொட்டும் பதில்களைக் கத்தரித்து எனது சேகரிப்பில் பாதுகாத்து வைத்தேன் . 2014இல் IAS Mains தேர்வு எழுதச் சென்னையில் படித்த பொழுது உச்சகட்ட உழைப்பை கொட்ட வேண்டி இருந்த இரு மாத காலம் மட்டும் விகடன் வாசிக்கவில்லை. அப்பொழுதும் மதுரையில் இருந்த எனது அம்மாவை இதழ்களை வாங்கி வைக்கச் சொன்னேன் . டிசம்பரில் தேர்வு முடித்து மதுரை வந்தவுடன் அம்மாவின் அரவணைப்புக்குப் பின் தேடியது விகடனின் பழைய இதழ்களைத் தான்

எனது நேர்முகத் தேர்வில் தமிழகம் சார்ந்த கேள்விகளுக்கு விகடனின் புத்தாண்டு சிறப்பிதழ்கள் மூலமே தயார் செய்தேன். ராஜூ முருகனின் "வட்டியும் முதலும்" மற்றும் பிரியா தம்பியின் "பேசாத பேச்செல்லாம்" நெகிழ்ச்சியான எழுத்தில் நம் வாழ்க்கையின் சகபயணிகளை அறிமுகம் செய்தன. பாரதி தம்பி , தமிழ் பத்திரிகை உலகத்தில் மிக முக்கியமானவர். அவரது "கற்க கசடற" மற்றும் "குடி குடியை கெடுக்கும்" , அரசு அதிகாரிகள் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள். திருமாவேலனின் வரலாற்றுப்பார்வை உள்ள கட்டுரைகள் ஏக சுவாரஸ்யம்

2015இல் மசூரிக்கு IAS பயிற்சிக்கு போன பொழுது எனது ஒரு வருத்தம்அங்கே விகடன் கிடைக்காது என்பது தான்சென்னை வெள்ளத்தையும் 2016 தேர்தலையும் தொடர்ந்து vikatan.comஇல் follow செய்தேன்கேரளாவில் பணி கிடைத்ததால் சுலபமாக இப்பொழுதும் விகடன் வாங்கிப் படிக்க முடிகிறதுசுஜாதாவின் சிறப்பே விகடனின் சிறப்பும்சிலப்பதிகார உரை எழுதிவிட்டு "Boys" போன்ற படத்துக்கும் வசனம் எழுதுவார் சுஜாதாஅது போல விகடன் இலக்கிய வானத்திலும் "தடம்பதிக்கும்விடலைச் சிறுவன் போல "Time pass"-உம் செய்யும்

90 வயதான பின்னும் "இனிமை இனிமேல் போகாது அட முதுமை எனக்கு வாராது" என S.P.B போல ஆனந்தமாய்ப் பாடித்திரிகிறது விகடன். பணிச்சுமை , எதிர்காலம் குறித்த கேள்விகள் எனப் பல திசைகளில் வாழ்க்கை சுழற்றி அடித்தாலும் 2003இல் ஒரு சாயங்காலத்தில் அம்மா எப்போது விகடனுடன் வருவார் எனக் காத்திருந்த அதே காதல் இப்போதும் விகடன் மீது உள்ளது. தமிழுக்கும் அறிவுக்கும் அழகான நடிகைகளின் புகைப்படங்களுக்கும் - நன்றி !

பின்குறிப்பு :ஆங்கிலப் படையெடுப்பை பொறுத்தருள்க!!

Comments

  1. Nice to hear ur experience umeshh...keep postinggg ....

    ReplyDelete
  2. Awesome experience .. All the best !!

    ReplyDelete
  3. Ajinkya Tours is one of the best tour operators in pune providing all types of tours and travel packages at affordable prices.

    ReplyDelete
  4. interesting story.............Expecting more stories like this

    ReplyDelete
  5. Travelling on a bus is perhaps the most convenient, easy, simple and safe mode while going from one place to another.

    Baltic Tour Operators | Baltic Tours | Baltic Travel | Bus Travel | Baltic Bus Travel | Baltic Travels | Baltic Travel | Baltic Travel Companies

    ReplyDelete
  6. Amazing site!!.. i can't belive this. what an Wonderful photography.
    the wedding photographers are doing a fabulous job. very stunning looking for that photo's.
    Kalyana mandapam in Chennai

    ReplyDelete
  7. Thanks for Share your travel experience.
    If you need more India's Tourist places information, visit our website today! Parbhat Travels

    ReplyDelete
  8. Any travel plans or not? This year take some time out and visit us at Baltic. Norlendatrip.com is known to be the best trustworthy Baltic travel organizers who will let you enjoy your holidays days with utmost pleasure and enthusiasm. Don’t worry about the booking rates as we are known to be offering some exciting packages and propose to see which you can hardly say no. So. Reach us at www.norlendatrip.com and enjoy the best and affordable trip to Baltic States.

    Baltic Tour Operators | Baltic Travel Companies | Baltic Travel | Baltic Travels | Baltic Tours | Baltic Tour | Bus Travel | Baltic Bus Travel

    ReplyDelete
  9. Very informative and useful historical post. I see you have a lot of other cool stuff available at your website, simply bookmarking it to check in spare time. Thanks and keep the good work up.

    Shanghai Tour Guide

    ReplyDelete
  10. Very informative and useful historical post. I see you have a lot of other cool stuff available at your website, simply bookmarking it to check in spare time. Thanks and keep the good work up.

    Xian Travel Guide

    ReplyDelete
  11. I cant read or understand this language but it can definitely be translated with google translator.
    meet and greet Manchester
    Manchester airport parking deals

    ReplyDelete
  12. Dear Blogger,
    Lovely Post, Your article is very nice and informative thanks for post. We are Classic Tours India providing best tour pacages in India. Specilist in Same Day Agra Tour Packages. You can leave behind all your worries for travel and hotel bookings as we offer various services in the field. we are happy to help you. Please Contact us.

    Thanks & Best Regards
    Classic Tours India (Rahul Rathor)
    +91-7017087206 | 8171934437
    info@classictoursindia.com
    https://www.classictoursindia.com

    ReplyDelete
  13. I have seen your blog, Very nicely written post. Your blog is very beneficial for every reader including me. Keep doing the great work so that people like me can learn some nice and new things. I would love to read more posts on your site.

    ReplyDelete

Post a Comment

Popular Posts